mc half-140.00
water pocket-10.00
dum-39.00
pickle-5.00
kadalai mittai-5.00
total-199.00
balance-1.00
அப்பாவிடம் ரூபாய் அனுப்ப சொல்லனும்.மொபைல்ல பேலன்ஸ் பார்த்தான்.30 ரூபாய் 25 பைசா இருந்தது.மணி 10.30 ஆகுது.காலையில சொல்லிக்கலாம்.
சொர்க்கம் மதுவிலே ஆரம்பித்தது
எப்போது?எப்படி தூங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.எழுந்து பார்த்த போது வியர்வையில் குளித்திருந்தான்.கரன்ட் இல்லை.சுற்றி இருந்த இருள் இன்னும் விடிய வில்லை என அவனுக்கு உணர்த்தியது.சற்று தள்ளி தரையில் கிடந்த செல் போனில் அலாரம் அடித்து கொண்டிருந்தது.எடுத்து பார்த்தான் ஆஃப் ஆகியது.தள்ளாடி எழுந்து சென்று கதவை திறந்தான் மழை கொட்டி கொண்டிருந்தது.அப்படியே கீழே விழுந்தான்.
தட் தட் தட்
மழை நீர் அவனது முகத்தில் தெறித்துக்கொண்டிருந்தது.செத்த பிணத்திற்கு உயிர் வந்தாற்போல திடீரென்று துள்ளி எழுந்தான்.கரண்ட் வந்திருந்தது.சார்ஜ் போட்டு விட்டு மொபைலை ஆன் செய்தான்.காலர் ட்யூனுக்கு மாத வாடகை 30 ரூபாயை எடுத்துட்டானுங்க.பரதேசி நெட்வொர்க்.
கையில் 1 ரூபாய் மொபைலில் 25 பைசா,கூட யாரும் இல்ல .எப்படி அப்பாவ பணம் போட்டு விட சொல்றது?தலையில் கை வைத்த படி வெளியே பார்த்தான்.
இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது.
5 comments:
Ironical. intha kashtathla ithu ellam venumaam, athula kanakku verai! neriya peru ipdi thaan lifea spoil panraanga. parents vera payyan vela thedraannu nambikkai la irupaanga. romba nalla eluthirukka :)
ithula ipdi oru msg irukune nee solli thaan enakku theriyuthu!solla vendiya msg ini thaan
haha..seri :) padikiren!
அட சூப்பர் கணக்கு .... தலைவர் பெரிய நிதி அமைச்சரா வருவாரோ பிற்பாதில??!! ( சும்மா தமாசு ) :) :) :) :) ...... ஹே இது யாரோ அனுபவப்பட்டவன் சொல்ற மாதிரி இருக்கு ?? ஹி ஹி ஹி ஹி .......
நல்லா இருக்கு கொஞ்சம் வித்யாசமா .... அப்பறம் கொஞ்சம் நெசமா நடக்கறத சொல்லிருக்க ....... :) :) :)
கொஞ்சம் சொந்த அனுபவம் தான்
Post a Comment